காதல் கவிதைகள்

காதல்!
பிரிவது சுலபம்
புரிவது கடினம்

புரியாமல் பிரிவது ரணம்
புரிந்தே பிரிவது மரணம்...




பொறாமைபட கூடாதா??
யாருடன் பேசினாலும்
சகஜமாய் என்னருகே
பொறுமையாய் நிற்கிறாய்
கொஞ்சமாவது
பொறாமைபட கூடாதா??




காதலிக்காமல் இருப்பதை விட
காதலித்து தோற்றுப் போவதே மேல்...




கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்!!
கைகள் தானாய் கிறுக்குதடா
உன் பெயரை.....




மெளனம் ஏன்?

சொல்ல வார்த்தை கோடிதான்
ஆனால்,
உன்னை நேரில் கண்டால்
மெளனம் ஏன்????



நீ இல்லாமல்
உயிர் வாழ முடியுமா? என்பதெல்லாம்
எனக்குத் தெரியாது............
நீ படித்தவன் தானே!
உனக்கும் கூடவா தெரியாது?
இதயம் இல்லாமல்

உயிர் வாழ முடியாது என்பது!!............


உன்னை மட்டுமல்ல,

உன் உடமைகளையும் நேசிக்கிறேன்
உனக்கே தெரியாமல்...



உன்னை
மறக்க வேண்டும்..
என்றே நினைக்கிறேன்
ன் நினைவே,
நீ தான்!
என்பதே அறியாமல்....

உடன் கண்ட காதல்
என்றும் நிலைப்பதில்லை,

உயிர் கொண்ட காதல்
என்றும் இறப்பதில்லை!!.....



இப்போதெல்லாம்....
உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கிறது,,,

உனக்குப் பிடிக்காததெல்லாம்
எனக்கும் பிடிப்பதில்லை

என்னையும் சேர்த்து!!!!!!



எத்தனை யுகங்கள் கடந்தாலும்
காத்திருப்பேன் ஏன் தெரியுமா?

உன்னை விட,
உன் நினைவுகள்

இதமானவை என்றும் நிஜமானவை...




உன் வார்த்தைகள் அற்ற,
சமாதியில் உறங்குகின்றது
நம் காதல்
.

என்று வந்து உயிர்ப்பிக்கப் போகிறாய்
என்னுயிரே......!!



என்னை அழவைப்பதில்
உனக்கு மகிழ்ச்சி என்றால்,
தாராளமாக சொல்லி விட்டு போ..
நீ என் தோழி மட்டுமே
என்று!!!



இரண்டு முறை வாழ்வதற்கு வரம் வேண்டும்
அதில்
ஒரு முறையாவது உன்னோடு வாழவேண்டும்!!!



பெரும்பாலும்
நான் உறங்குவதில்லை

உன் நினைவுகள்
கலைந்து கனவுகளாகிவிடும் என்ற கவலையினால்!!!




எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள முடியாத போது

உனக்குள் இருக்கும்
என்னை

எப்படியடா தெரிந்து கொள்வாய்??



நீ என்னை லட்சியம் செய்யவில்லை
என பலமுறை அழுதிருக்கிறேன்
என்னை அழ வைப்பதே
உன் லட்சியமாய்

இருந்தது தெரியாமல்......





உன் இதயத்தில் என்னை வைத்திருப்பதாலா

அதை எனக்கு தர மறுக்கிறாய்
இல்லை,
இதயமே இல்லாததாலா
என்னை நீ வெறுக்கிறாய்?




காதல் !


என்பது சொல்லிப் புரிவதில்லை

உனக்கு சொன்னாலும் புரிவதில்லை








காதல்!
ஒரு முறை தான் வரும்
மறுமுறை வராது
என்றால்
உன் காதல் தூய்மையானது
என் காதல் பொய்யானதா?


உன் ஒரே மெளனத்தினால்
நான்
ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தேன்

ஆனால்
என் ஆயிரம் வார்த்தைகளில்
ஒன்றைக் கூட உன்னால் உணர முடியவில்லையே
ஏன்???




உள்ளுக்குள்
நீ இருப்பதால் தான்
உயிருடன் நான் இருக்கிறேன்



எத்தனை கடிதம் எழுதியும்
என் காதலை நீ ஏற்கவில்லை
ஏற்றிருக்கலாம்
எழுதியதில் ஒன்றை
உன்னிடம் கொடுத்திருந்தால்'




நீ என்ற ஓரெழுத்தும்
நான் என்ற ஈரெழுத்தும்
காதல்
என்ற மூன்றெழுத்தில் சந்தித்தோம்.

இதில்
மரணம் என்ற நான்கெழுத்தில் பிரிவோமா?
இல்லை
திருமணம் என்ற ஐந்தெழுத்தில் இணைவோமா?? !!!




என் விழிகள் திறந்திருக்கும் போதே

எப்படித் திருட முடிந்தது
உன்னால்?
என் இதயத்தை




ஏனடா?
பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகிறது இரண்டாய்.....




மின்னலைப் பார்த்தால்
கண்ணைப் பறிக்கும் என்பார்கள்
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை மட்டுமல்ல
என்இதயத்தையும் பறித்துக் கொண்டது
என் இதயத்தைப் பறித்த மின்னலே
என் உயிரையும் பறித்து விடு..




அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கிறாய்

உனக்குத் தெரியுமா?
அளவு மட்டும் தான் கண்ணாடியில் தெரியும்
உன் அழகெல்லாம்
என் கண்ணில் மட்டும் தான் தெரியும்.




உன் காதல்

எனக்கு உயிர் போல
அளிப்பாயா?
அழிப்பாயா?










பார்க்கும் பொருளெல்லாம் நீயாகத் தெரிகிறது
விழிகளை மூடினேன்
நீ மட்டும் தெரிகிறாய்.




பார்க்க துடிக்கிறேன் உன்னை
பார்க்க மறுக்கிறாய் என்னை

கேட்கத் துடிக்கிறேன் உன்னிடம்

மெளனம் சாதிக்கிறாய் என்னிடம்

பேச துடிக்கிறேன் உன்னிடம்

பேசவே மறுக்கிறாய் என்னிடம்
நினைத்துத் துடிக்கிறேன் உன்னை
நினைக்கவே மறுக்கிறாய் என்னை....





என் கண்ணுக்குள் நீ இருக்கிறாய்

அதை நீயும் அறிவாய்
உன்மனதுக்குள் நான் சுவாசிக்கின்றேன்
அதை ஏன் அறிய மறுக்கின்றாய்?





உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர்த் துளிகள் தெரியும்,
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட.......








பத்து மாதம் சுமந்து பெற்றவள் தாய் எனில்
இத்தனை வருடமாய்
மனதில் உன்னைச் சுமந்து கொண்டிருக்கும் என்னை
என்னவென்று அழைப்பாய்?




உதடு பிரியா புன்னகை!
ஆடம்பரமில்லா வெட்கம்!
எளிமையான அந்த குறும்புப் பார்வை!

உன்னைப் போல்,
உலகில் ஒன்பது பேரெல்லாம்
நிச்சயமாய் இருக்க முடியாது..




அவசரமாய் நான் எழுதிய கவிதைகளில்
என் தோழனாயிருந்தாய்,
உன்னைப் பிரிந்த பின்ஒரு பெளர்ணமி இரவில்
படித்து விட்டு தனிமையில் அழுதேன்
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்.....




கால் வலிக்கும் வரை
உன்விரல் பிடித்து நடக்க வேண்டும்
இரண்டு வயது குழந்தை போல




முடியும் என்று சொல்லி
நீ பேசாமலிருந்த அந்த பத்து நாட்களின் வலி
எங்கே தொலைந்தது?
இந்த பதினோராவது நாள் முத்தத்தின் போது.....



பல நாட்கள் முயற்சி செய்து
என்னை
சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருப்பேன்,
எதிரே வந்து
உன் சில வினாடி புன்முறுவலில்

என்னை கலைத்துப் போய் விடுகிறாய்!!



எனக்குத் தான் புரியவில்லை!
உண்மையைச் சொல்
உனக்காவது புரிகிறதா?
உன் பார்வையின் அர்த்தம்!!!!!!!



இந்த பூமியில் வேறே ஆணா இல்லை?
ஆனால்
யாரும் உன்னைப் போல் இல்லையே!!!!




சத்தியமாய் சொல்கிறேன்
என்னிடம் உன் நினைவுகள் இல்லை
உன் நினைவுகளிடம் தான் நான் இருக்கிறேன்




மரணத்தைத் தொட்டு விட்டு வந்தவ
ள் நான்
உன் ஒரு சில வினாடி மெளனத்தால்





உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!!!
ஏன் என்றால்?
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்!!!
நீ என்னை விட்டு சென்றாலும்
என்,
காதல் உன்னை விட்டு செல்லவில்லை
ஏன் என்றால்
நான் உன்னை காதலிக்கவில்லை.
உன் மனதைத்தான் காதலித்தேன்..
உன்னை எந்தளவுக்கு
பிடிக்கும் என்று தெரியவில்லை
ஆனால்!!!
உன்னை பிடித்த அளவுக்கு
இந்த உலகத்தில் வேறு எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை
உன்னை தவிர!!!!!!!!



யாரும் பார்க்காத வானம்
உன் மனத்தை சொல்லவா!
யாரும் பேசாத மொழி
உன் மௌனத்தை சொல்லவா!
யாரும் பாடாத பாடல்
உன் பேச்சை சொல்லவா!
யாரும் எழுதாத கவிதை
உன் கண்களை சொல்லவா!
யாரும் வரையாத ஓவியம்
உன் முகத்தை சொல்லவா!
யாரும் செதுக்காத சிற்பம்
உன் அழகைச் சொல்லவா!
யாரும் சொல்லாத காதல்
நம் வாழ்க்கையை சொல்லவா....!!




என் நெஞ்சே நான் இறக்கும் வரை
உன் மீது கொண்ட காதலும்
உன் நினைவும்
என்னை விட்டு அழியாது
என் உயிர் என் உடலை விட்டு
பிரியும் போது கூட உன் நினைவேடுதான் பிரியும்
ஏனெனின் என் உணர்விலும் என் கனவிலும்
என் நினைவிலும் நீ கலந்து விட்டாய்

உன்னை நினைத்து நான் படும் வேதனைகளை
கவிதையாக வடிக்கின்றேன் உன் காதலுக்காக
நான் துடி துடிக்கின்றேன் என்பதை என்
கவிதைகளினூடக நீ புரிந்து கொண்டு
உன் காதலை என்னிடம் சொல்வாய் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்....

கண்களில் விழிநீரோடு
நீ என்னுடன் பேசுவதை
நிறுத்திக்கொண்டால் நான் உன்னை
மறந்து விடுவேன் என்று நினைத்து விடாதே
என் உடல் அசையும் வரை தொடரும்
உன் மீது நான் கொண்ட காதல் வாழும்




அன்பாக அறிவுரை சொன்ன நீ.!

இன்று அமைதியாக நின்று கொண்டு
என்னை வதைத்து கொண்டு இருக்கின்றாய்..
உன் பதில்களை எண்ணி தினம் தினம்..
உருகி கொண்டு இருக்கின்றேன்.!
எப்போது என்மனச்சாலையில்
உன் பாத சுவடுகளை பதிப்பாய் என்று....?



நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்று யார் சொன்னது?
எனக்கு மட்டுமே தெரியும்
நான் காதலிப்பது
உன் நினைவுகளை என்று.


உன் மின்னல் பார்வையிலே
தெரித்த ஆயிரம் கவிதைகளை
இன்னும் நான்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உன்னையே நாடும் என் மனம்!

காற்றுக்கு நன்றி!
ப்ரியமானவன் - உன்
மூச்சைச் சுமந்து வந்ததற்கு.

பைத்தியம் தான் நான்!
தொலைதூரத்தில் நீ…
அருகாமையில் தேடல்…

அது என்ன
வசியமோ
உன் பெயரில்
மயக்கம் பிறக்கிறது.

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழன்!!!!





எனக்குத் தெரியும்,
நீ பொய்யாக கோபப்பட்டாய் என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா?
நான் மெய்யாக வருத்தப்பட்டேன் என்று....




நீ உன்னை மறக்கச் சொன்னாய்
ஆனால்,
நீ என் உயிரில் கலந்தவன்
உன்னை மறப்பது என்றால் நான் உயிரை விட வேண்டும்
இதற்குப் பதில் கூறு
நான் உன்னை மறக்கிறேன்....




நான் மெளனமாக இருக்கிறேன் என்று
அன்பே அசட்டையாக இருந்து விடாதே
மெளனத்தின் உள்ளே தான்
அழுது கொண்டிருக்கிறேன்




நான் சாகும் வரை
என்னை சாகடித்துக் கொண்டு இருக்கும்
உன் நினைவுகள்



உளி கொண்டு
செதுக்காமலே
உன் அழகு
என்னைச் சிலையாக்கியது!

கனவிலாவது
உன்னைக் காணலாம்
என்று நினைத்தேன்.

என் தூக்கத்தையும்
நீ திருடிக்கொண்டாயே...
இது நியாயமா???

காதலின் புனிதத்தைக்
கட்டிக் காப்பதெல்லாம்
காதல் கை கூடாமல்
தோற்றுப் போனவர்களே...

காதல் தோல்வியடையும்போதுதான்
அதன்
உண்மைப் பரி்மாணம் வெளிப்படுகிறது.

என்இதயத்தில்
நீ வந்து சென்ற
காலடி தடம் ஒன்றே
போதும்
கடைசி மூச்சுவரை
உன் நினைவுகளில்
உயிர் வாழ!

ஒரு காதலன்
தன் காதலியை
தேவதை
என்று வர்ணிப்பான்
ஒரு காதலி
நான் உன்னை
எப்படி வர்ணிக்க?


என் மனது என்வசமில்லை...
அதை நானும் தேடவில்லை- அது

உன் வசமே என்றறிந்ததனால்...!
ஆனபோதும் உனக்கும்

சொல்ல விருப்பமில்லை - அது
உன்னிடம் தான் உள்ளதென்று!!




நட்சத்திரங்களோடு
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் மற்றும் தேவதைகள்
சுகந்தம் பாட....
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..
இனி வரப்போவதில்லை
எனத் தெரிந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்........

நீ என் அருகில் இல்லைஎன்பதை
என்ன சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே என் இதயம்


எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்ககளும், உன் வார்த்தைகளும்
இனி என்று... எனக்கு….?

மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ளமறுக்கிறது….
ஓயாமல் சிரிக்கும் உன்புகைப்படம்,
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டு
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன்நினைவுகள்.. அனைத்தும் வெறும்.கனவு
கனவுகள் மட்டுமே…. இன்று


இது காதல் சொல்லும்
கவிதை அல்ல…..!
கவிதை சொல்லும்
காதலும் அல்ல…..!
என்னோடு நடமாடும் உனக்காக
என் இதயம் பேசும்..
வார்த்தைகள்….!



அன்பே என்னால் நேசிக்க முடியும்..!
நீ இல்லாமல் சுவாசிக்கத்தான் முடியாது.
என்னால் அழ முடியும் ..
நீ இல்லாமல் சிரிக்கத்தான் முடியாது .!
என்னால் சாக முடியும்
அன்பே நீ இல்லாமல் வாழத்தான் முடியாது.!


உன் பிரிவை என்ணி வாடிய ....!

என் உள்ளம் மீண்டும் ஒருமுறை
என் வாசலுக்கு நீ வந்து விட்டுப் போனதால்
குதுகலிக்கின்றது...
இடிந்து போயிருந்த என் இதயத்திற்கு
இதம்
தந்தவனே !
எந்தன் இதயத்தின் இறுதித் துடிப்பு ..

இருக்கும் வரை எனை நீ பிரியாதிரு..!


பிரிந்து போனாலும்

மறந்து போக முடியாத..
அவன் மகத்தான நினைவுகளுடன்
நான் வாழ்கின்றேன்



பார்த்து பழகிய முகங்களில்

உன் முகம் மறக்கவில்லை ...

கேட்டு ரசித்த வார்த்தைகளில்
உன் குரல் மறக்கவில்லை...

நித்தம் உன் முகம் காண
என் மனம் தவிக்கிறது
உன் முகம் காணாவிடில்
எனக்கு இல்லை நிம்மதி..!



மறந்துவிடு என்றாய் மனதென்ன சித்திரமா
நினைத்தவுடன் அழித்துவிடுவதற்கு??
மறந்து விடு என்ற உன் வார்த்தையை
மறந்து விடுவேன் அது சுலபம்
உன்னையே மறப்பதென்றால்..
எனக்கு மரணம்தான் வழி...!






நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்.....





சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன்.....

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்....

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடுகிறவனே!!!

நீ என்று கண்டு கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை

தொடர்வேன் என்றும்.....



கண்களுக்கு அருகில் இமைகள் இருந்தாலும்
கண்களால் இமைகளை பார்க்க முடிவதில்லை
இருந்தும் கண்கள் இமைகளை வெறுப்பது இல்லை
என்னருகில் நீ இருந்தும்
என்னால் உன்னுடன்
பேச முடியவில்லை இருந்தும்
உன்னை
என்னால் வெறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது



உன் நிழலை பார்த்ததில் எனக்கு கோபம் வருகின்றது
ஏன் என்றால்
உன் நிழல் என்னை விட
அதிக நேரம் உன்னிடம் இருப்பதனால்....




உன்னை காதலிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது....!
ஆனால்
இனி வாழ போகும் நொடிகள் அனைத்தும்
உன்னை காதலிக்க மட்டும் தான் என்பது தெரியும்....




காலம் காத்திருந்தால், என்றாவது வசந்தம் வரும்
பாலைவனம் திரிந்தால், எங்காவது சோலை வரும்
கற்பனை செய்தால், எப்போதாவது கவிதை வரும்
நான் என்ன செய்தும், உன் காதல் வரவில்லையே?

காதல் வருமா?


நான் எழுதும் கவிதை

உனக்காக என்றால்
நீ வாழும் வாழ்க்கை
எனக்காகவே அமையட்டுமே!!!!!!




காதலித்துப் பார்கையெழுத்து அழகாகும்
என்றான் ஒரு
கவிஞன்...

நானும் காதலித்தேன்...தலையெழுத்தே மாறிப்போனது

உன் பெயரை வாசிக்கும் வரை அறியவில்லை...
இனி நான் சுவாசிக்கும் வேதம் உன் பெயரைன்று.. .



கண்ணோடு கலந்திருந்தால் கண்ணிரோடு விட்டிருப்பேன் !
என் உயிரோடு கலந்து விட்டாய்...
உன்னை
பிரிவதெப்படி ?




அன்பே

உச்சரிக்கும் வார்த்தையை கூட
உன்னிடத்தில் அள்ளிகொடுக்க முடியவில்லை
எப்படி என்னுள் இருக்கும் காதலை உன்னிடத்தில்
அள்ளிகொடுக்க போகிறேன்




நிஜங்களின் நிசப்தம் நீ

கனவுகளின் கருவுலம் நீ
இன்பத்தின் இனிமை நீ
துன்பத்தின் துணிவு நீ
கல்லறைக்கு சென்றாலும் கா
ர்த்திருபேன்
என்று சொல்ல வைக்கு
ம் உறவு .....



பார்த்து வந்த காதல் என் பார்வையை விட்டு
பிரியவில்லை
உன்னை நினைத்து வந்த காத
ல் என் உள்ளதை விட்டு
பிரியவில்லை



உன் நினைவோடு
வாழ்கின்றேன் இப்போது
உன்னோடு வாழ்வது
எப்போது ?



அன்பே!!
உனை காணாது நான்
ஒரு போதும் இருந்தது இல்லை
ஏனெனில் என் மனதில் என்றுமே
நீ காணமால் போனதில்லை ...



இந்த ஜென்மம் மட்டுமல்ல- இன்னும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்- உனக்காகவும்
உன் அன்புக்குமே காத்திருப்பேன்




உன்னிடம் சொல்லிவிட்டேன்
என்ற எண்ணத்தில்
நான் இருப்பதை விட..
நீ என்னை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை
என்கின்ற துக்கத்திலேயே
என் இதயம் இறந்துபோய்கிறது
தினமும்..

வாழ்வின் சுவையை
உன்னில் அறிய முயன்றேன்
இன்று...
கண்ணீரின் சுவையை
அறிந்துகொண்டேன்..
காதலும் கடலும்
ஒன்று தான்.
கடலில் முழ்கி
முத்தெடுப்பது போல
தான் காதலும்.

உன்கண்கள் கண்டேன்
என் இதயம் தொலைத்தேன்...

உன் அன்பை உணர்ந்தேன்..
நீ என் அருகில் இருக்கும்
போதெல்லாம் என் நெஞ்சில்
சாரலைஉணர்ந்தேன்.. இருந்தாய்
இன்று தூரமாய் சென்றுவிடவே
என் நெஞ்சம் பாரமாய் ஆவதேனடா....

உன்னருகில் நின்றபோது
இடமாறதுடிக்கும்
என் இதயம்
கரை தீண்டும் அலை
போல
உன் இதயத்தை வந்து வந்து
செல்கிறதே!

என் கன்னத்தை
உன் இதழால் ஈரமாக்குவாய்

என்று நான் கனவு கண்டபோது
ஈரத்தை உணர்ந்தேன்
உன் முத்தத்தால் அல்ல
என் கண்கள் விட்ட கண்ணீரால்

உன் பக்கத்தில் நிற்கவே
வெகுநேரம் நின்றேன்
வெகுநேரம் நின்றும்
உன் மௌனம் மலராத மொட்டகவே
இருந்தன.. உன் இதழ் பார்த்தே
என் பூக்கள் எல்லாம் வாடிபோன
டா......


பூக்களை கூட நேசிக்காதவ
ள்
உன்னை பார்த்தும்
நேசிக்க தொடங்கினேன்........
பூக்களின் மென்மையை அறியாதவ
ள்
உன்மனதின் மென்மையை அறிந்தேன்..
விழிகூட கேட்கிறது
கண்ணீர் வரும் நேரங்களில்
உன் மடிவேண்டுமென்று,,,,,,,,,,,
என் விழிமூடுமுன் வந்துவிடு
உன்முகத்தை பார்த்தே
விடைபெறுகிறேன்..
உன்னை விட்டு அல்ல
இந்த மண்ணை விட்டு........


நான் கவிதை எழுதத்
தொடங்கும் போதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ
எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்
கவிதை என்று - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்
பெயரை எழுதும்போதுதான்
தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள் நன்றாய்ப்
புரிகி‎ன்றன எனக்கு...........


உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்
இன்றாவது பேசிவிடு
என்னோடு.......!!!


















நீ என்னை காதலிக்காமல் விட்டாலும்

நான் உன்னை


காதலித்துக் கொண்டு இருப்பேன்


என் உயிருள்ள வரை........








உண்மைக் காதல் என்றும் அழியாது...